fbpx

76 வயதில் குழந்தை பெற்றுக்கொண்ட எலான் மஸ்க்கின் தந்தை.. அதுவும் அவரின் வளர்ப்பு மகளுடன்….

பெரும்பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க்-கும் அவரின் வளர்ப்பு மகளுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 2-வது குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

தி சன் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், தனது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்றுக்கொண்டது திட்டமிடப்படாதது என்று தெரிவித்தார்.. மேலும், இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டும் நாம் பூமியில் இருப்பதற்கான ஒரே காரணம் என்று தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய எரோல் மஸ் “நாம் பூமியில் இருக்கும் ஒரே விஷயம் இனப்பெருக்கம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்..

76 வயதான எரோல் மஸ்க் ஒரு பணக்கார தென்னாப்பிரிக்க பொறியாளர் ஆவர்.. அவருக்கும் 35 வயதாகும் தனது மகள் ஜானா பெசூடென்ஹவுட்-க்கும் கடந்த 2017-ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார்.. இந்நிலையில் 2019-ம் ஆண்டில் மற்றொரு குழந்தை பிறந்ததாக எரோல் மஸ் கூறியுள்ளார்.. புதிய குழந்தை பிறந்த பிறகு அவர்கள் 18 மாதங்கள் ஒன்றாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்… எனினும் தனக்கும் தனது வளர்ப்பு மகளுக்கும் 41 வயது வித்தியாசம் என்பதால், தாங்கள் இப்போது ஒன்றாக வாழவில்லை என்றும் அவர் கூறினார்.

எரோல் மஸ்க், ஜானா பெசூடென்ஹவுட்டின் தாய் ஹெய்ட் என்பவர் முதலில் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து பேசிய அவர் ” ஜானாவின் தாயை நான் 25 வயதில் திருமணம் செய்துகொண்டேன், எனக்கு 45 வயதாகிறது. என் வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த தோற்றமுடைய பெண்களில் அவர் ஒருவராக இருக்கலாம்.. ஆனால் அவர் இரண்டு தலைமுறைகள் பின்தங்கியிருப்பதை நான் உணர்ந்தேன். நான் அவரை திருமணம் மணந்தபோது ஒரு தலைமுறை பின்தங்கியிருந்தேன்.

எனவே ஒரு பெண்ணை திருமணம் செய்யும் எந்த ஆணும், நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தாலும், அது சிறிது காலத்திற்கு நன்றாக இருக்கும். ஆனால் ஒரு பெரிய இடைவெளி உள்ளது… அந்த இடைவெளி தன்னை வெளிப்படுத்தும்.. நான் மேலும் சில குழந்தைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன். நான் இதைப் பற்றி நினைத்திருந்தால் எலான் உள்ளிட என் பிள்ளைகள் பிறந்திருக்க மாட்டார்கள்..” என்று தெரிவித்தார்..

முன்னதாக கடந்த வாரம், எலான் மஸ்க்கின் நிறுவனமான நியூராலிங்கில் நிர்வாகியான ஷிவோன் ஜிலிஸ் என்பவருக்கும் எலான் மஸ்கிற்கும் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

தொழில்‌ துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கு செம வாய்ப்பு...! எல்லாம் தவறாம பயன்படுத்திக்கோங்க...!

Tue Jul 19 , 2022
சுய வேலைவாய்ப்பு கடன் திட்ட பிரத்யேக விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை, நாளை மறுநாள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி, தனது செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில்‌ சுய வேலைவாய்ப்பை உருவாக்கும்‌ பொருட்டு மாவட்ட தொழில்‌ மையம்‌ முலம்‌ வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌ (UYEGP), புதிய தொழில்‌ முனைவோர்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவன மேம்பாட்டுத்‌ […]

You May Like