fbpx

டீ விலை ரூ.20 தான்.. ஆனா ரூ.70 செலுத்திய ரயில் பயணி… இதுதான் காரணம்…

சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 20 ரூபாய் தேநீரை 70 ரூபாய் செலுத்தி அருந்தி அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பயணி, கடந்த 28-ஆம் தேதி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் என்பதால் அவர் தேநீர் ஆர்டர் செய்துள்ளார். அதற்கான விலையை பார்த்ததும் அவர் அதிர்ச்சிடையந்துள்ளார்.. ஆம்.. அதில் தேநீரின் விலை ரூ.20 என்றும், சேவை கட்டணம் ரூ.50 எனவும், மொத்தமாக ரூ.70 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான கட்டணத்தை அவர் செலுத்தி உள்ளார்.

எனினும் அதை அப்படியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.. மேலும் அவரின் பதிவில் “ 20 ரூபாய் தேநீருக்கு 50 ரூபாய் வரி, நாட்டின் பொருளாதாரம் உண்மையாகவே மாறிவிட்டது, இதுவரை வரலாறு மட்டுமே மாறி இருந்தது..!” என்று குறிப்பிட்டுள்ளார்..

இந்நிலையில், அதற்கு ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்களில், உணவு, பானம் போன்ற சேவைகளுக்கான விலை டிக்கெட்டின் விலையுடன் வருகின்றன. இருப்பினும், பயணிகள் ரயிலில் உணவைப் பெறுவதையும் அதற்குப் பதிலாக வாங்குவதையும் தவிர்க்கலாம். எனினும் உணவை ஆர்டர் செய்ய பயணிகள் ரூ.50 சேவைக் கட்டணமாக செலுத்த வேண்டும்..

ராஜ்தானி, சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் போது உணவை முன்பதிவு செய்யவில்லை எனில் அதற்கு சேவை கட்டணம் ரூ.50 வசூலிக்கப்படும். அது தேநீர், காபி, உணவு என அனைத்திற்கும் பொருந்தும் என தெரிவித்துள்ளது ரயில்வே. மற்றபடி பயணியிடமிருந்து கூடுதல் கட்டணம் ஏதும் வசூல் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Maha

Next Post

பிரபல இளம் நடிகர் புற்றுநோயால் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..

Sat Jul 2 , 2022
அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.. அவருக்கு வயது 30. அசாமிய திரையுலகில் முக்கியமான நபராக கருதப்பட்டவர் கிஷோர் தாஸ்.. இவர் நடிகர், நடனக் கலைஞர், மாடல் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத்திறமை கொண்டவர்.. 1991-ம் ஆண்டு பிறந்த கிஷோர் 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.. கிஷோரின் Turrut Turut என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. […]

You May Like