fbpx

இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

இந்தோனேசியாவின் மிகப்பெரிய பாலி தீவு பகுதியில் வசித்து வரும் மக்கள் பயனடையும் வகையில் தனது ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இணைய சேவையை எலான் மஸ்க், ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கி வைத்தார். இதற்காக அவர் அந்த நாட்டுக்கு பயணித்தார்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் உரிமையாளர் எலான் மஸ்க். உலகின் பெரும் பணக்காரர். இவர் தற்போது உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்களை கொண்ட நாடான இந்தோனேசியாவில் தடம் பதித்துள்ளார். தனது ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவையை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். பாலியின் தலைநகர் டென்பசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க்குடன் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவும் பங்கேற்றார்.

இதன் மூலம் சுமார் பல ஆயிரம் தீவு பகுதிகளைச் சேர்ந்த பல லட்சம் மக்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொலை தூரங்களில் உள்ள அந்தப் பகுதிகளில் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது ஸ்டார்லிங்க். இதன் தொடக்க விழாவில் இணைய சேவையின் வேகமும் பரிசோதிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத் தலைவர் மஸ்க் கூறுகையில், “தொலைதூர மருத்துவ உதவிகளுக்கு இது மிகவும் உதவும். இணையவழி கல்வி பெறவும் நல்வாய்ப்பாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இணைய சேவைக்கான பயன்பாடு கிடைத்தால் யார் வேண்டுமானாலும் தங்களது தயாரிப்புகளை உலகில் விற்பனை செய்ய முடியும். இது மக்களுக்கு சிறந்த வகையில் பயன் தரும் என நான் நம்புகிறேன்” என்றார்.

ஸ்டார்லிங்க் சேவை இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இது நடைமுறைக்கு வந்தால் டவர் (செல்போன் சிக்னல் கோபுரங்கள்) சார்ந்த நெட்வொர்க் சிக்கல்களை பயனர்கள் எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது..!

Next Post

கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது? காரணத்தை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க!!

Tue May 21 , 2024
நாம் வீட்டில் பயன்படுத்துகின்ற கேஸ் சிலிண்டர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று நாம் எப்போதாவாது யோசித்தது உண்டா? நம்முடைய வாழ்க்கையில் தினம் தினம் எண்ணற்ற விஷயங்களை பார்க்கிறோம். ஆனால், அவைகள் ஏன் அப்படி இருக்கின்றன என்பதை ஒருநாளும் யோசித்து இருக்கமாட்டோம். அதுபோலதான் கேஸ் சிலிண்டரும். அவற்றின் நிறத்திற்கு பின்னால் மிகப்பெரிய விஷயம் இருக்கிறது.பொதுவாக சிவப்பு என்பது ஆபத்தைக் குறிக்கும். ஆபத்து உள்ள இடங்களில் சிவப்பு துணி அல்லது பலகை […]

You May Like