fbpx

நர்ஸ் வேடத்தில் வந்த எமன்..!! மருமகள் போட்ட பக்கா ஸ்கெட்ச்..!! கடைசியில் காட்டிக் கொடுத்த ஃபோன் நம்பர்..!! மாமியாருக்கு வந்த சோதனை..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே குச்சிபாளையத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதாவது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் தனது வீட்டிற்கு வந்த நர்ஸ், தனக்கு ஊக்க மருந்தை கொடுத்ததாகவும், இதனால் வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் தனலட்சுமி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வந்த பெண் யார்..? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, அப்படி யாரையும் தாங்கள் அனுப்பவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதனால், நர்ஸ் எனக் கூறி வந்தவரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் அவர் ராஜகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கோமதி என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த சம்பவத்திற்கு பின் பெரிய சதித்திட்டமே இருந்திருக்கிறது.

இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது தமிழ்ச்செல்வி என்பவர் தான். அவர் வேறு யாரும் இல்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனலட்சுமியின் மருமகள் தான். தனலட்சுமியின் மகன் சரவணபெருமாளும், தமிழ்செல்வியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதற்கு தனலட்சுமி சம்மதிக்கவில்லை. இதனால், வரப்பாளையம் பகுதியில் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் சரவண பெருமாள். இதனால், அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டு தாய் தனலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே, மகனின் திருமணத்தை பிடிக்காத தனலட்சுமி, இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தமிழ்ச்செல்வியை பிரிந்து வந்தால் வேறு திருமணம் செய்து வைக்கிறேன் என்றும் சொத்தில் பங்கும் தருகிறேன் என்றும் தனலட்சுமி கூறியிருக்கிறார்.

இதையடுத்து, மாமியார் தங்களை பிரிக்க நினைப்பது குறித்து தனது தாய் பாப்பாத்தியிடம் பற்ற வைத்துள்ளார் தமிழ்ச்செல்வி. ஆனால், தனலட்சுமி இறந்துவிட்டால் சொத்து தானாகவே தனது கணவருக்கு வந்து விடும் என்பதால், அவரை கொலை செய்ய திட்டமிட்டிருக்கிறார் தமிழ்ச்செல்வி. இதற்கு அவரது தாயும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த கொலையை சந்தேகமே இல்லாமல் முடிக்க வேண்டும் என்பதற்காக நர்ஸ் வேடத்தில் சென்றுள்ளார் கோமதி. நர்சிங் படிப்பை பாதியில் விட்ட கோமதி, தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் தான், பாப்பாத்திக்கும் மருத்துவ சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவரை பயன்படுத்தி இந்த கொலையை செயல்படுத்த தாயும், மகளும் திட்டம் போட்டுள்ளனர். முதலில் கொலை என்பதால், நடுங்கிப்போன கோமதி, சொத்தில் ஒரு பங்கு உனக்கு தருவதாக கூறியதை அடுத்து, அவர் சம்மதித்துள்ளார். அதன்படி, மக்களை தேடி மருத்துவ திட்டம் நர்ஸ் எனக் கூறி தனலட்சுமியின் வீட்டிற்கு கோமதி சென்றுள்ளார். அவரது உடல் நிலையை பரிசோதிப்போல் நடித்து குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.

இதற்காக கோமதியை காரில் அழைத்துச் சென்று இறக்கி விட்டுள்ளார் பாப்பாத்தி. தொடர்ந்து தனலட்சுமி வீட்டுக்கு சென்ற அவர் உங்களுக்கு பிரஷர் அதிகம் இருக்கிறது என கூறி அதற்கு ஊக்க மருந்து குடிக்க வேண்டும் என கூறியுள்ளார். பின்னர், விஷம் கலந்து வைத்திருந்த குளிர்பானத்தையும் கொடுத்துள்ளார். மருந்து கசக்கிறது என தனலட்சுமி கூறியும், மருந்து என்றாலே கசக்கும் என சமாதானப்படுத்தி குடிக்க வைத்து விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார் கோமதி.

இந்நிலையில் தான், திடீரென அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் கோமதிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், சற்று நேரத்தில் சரியாகிவிடும் எனக்கூறிய நிலையில், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தன், கொலை திட்டத்திற்காக வந்த கோமதி தனக்கே தெரியாமல் செல்போன் எண்ணை கொடுத்ததும், அந்த செல்போன் என் மூலமே பாப்பாத்தி, தமிழ்ச்செல்வி, கோமதி ஆகிய 3 பேர் போலீசிடம் சிக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More : எடப்பாடிக்கு எதிராக திரும்பிய செங்கோட்டையன்..!! அதிமுகவில் வெடித்த பூகம்பம்..!! கட்சிக்குள் சலசலப்பு..!!

English Summary

Dhanalakshmi said that the nurse gave her a stimulant, which caused her to vomit and feel sick.

Chella

Next Post

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்.. கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா..!!

Mon Feb 10 , 2025
Rohit Sharma breaks Chris Gayle's record

You May Like