fbpx

Telangana: விடாமல் துரத்திய எமன்!… 10 நாட்களில் விபத்தில் உயிரிழந்த பெண் எம்.எல்.ஏ. Lasya Nanditha!… அதிர்ச்சி சம்பவம்!

Telangana: தெலுங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி(BRS) சட்டமன்ற உறுப்பினர் ஜி லாஸ்யா நந்திதா(Lasya Nanditha) சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 37.

தெலுங்கானா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் சட்டப்பேரவை உறுப்பினராக நந்திதா தேர்வு செய்யப்பட்டார். அம்மாநில சட்டப்பேரவையில் இளம் பெண் எம்.எல்.ஏக்களில் இவர் கவனிக்கத்தக்கவர். இந்தநிலையில், ஐதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓஆர்ஆர் பகுதியில் பாரத ராஷ்டிர சமிதி சட்டமன்ற உறுப்பினர் ஜி லாஸ்யா நந்திதா காரில் சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போர் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த எம்.எல்.ஏ.நந்திதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த கார் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் நந்தித்தா உயிர் தப்பினார். அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அடுத்த 10 நாட்களில் நிகழ்ந்த விபத்தில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அம்மாநில முதல்வர் ரேவ்நாத் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

English summary: BRS MLA Lasya Nanditha passed away in a road accident on Friday. The incident took place on Sultanpur Outer Ring Road (ORR) under the jurisdiction of Aminpur Mandal in Sangareddy. 

Readmore:பெரும் சோகம்!… முன்னாள் முதலமைச்சர் காலமானார்!… அரசியல் தலைவர்கள் இரங்கல்!

Kokila

Next Post

ANDHRA PRADESH| "ஆணுறை மட்டும் தானா இல்லை வயாகராவுமா."? ஆணுறைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள்.! YSR காங்கிரஸ் கடும் கண்டனம்.!

Fri Feb 23 , 2024
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தங்களது கட்சியின் சாதனைகளை பொதுமக்களுக்கு கூறுவதோடு மட்டுமல்லாமல் தங்களது எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று இருக்கும் விசித்திரமான சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் ஆளும் கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் சின்னங்களுடன் ஆணுறை […]

You May Like