fbpx

வீடு, வாகனம் போன்ற கடன்களுக்கான EMI அதிகரிக்கப்போகிறது? ரெப்போ வட்டி விகிதம் உயர்வு எதிரொலி!!!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு உள்ளது ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி ரெப்போ வட்டி 0.35 சதவீதம் அதிகரிக்கபட்டு உள்ளது.

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதால் வங்கிக்கடன்பெற்று வரும் பொதுமக்கள் தாங்கள் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கட்ட வேண்டிய சூழல் ஏற்படும். குறிப்பாக வீட்டுக் கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றின் வட்டி விகிதம் அதிகரிக்கும் சூழல் நிலவுகிறது. இது கடன் வாங்குபவர்களின் இஎம்ஐ-களில் ( மாத தவணை ) நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் இது புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு மட்டுமின்றி, ஏற்கனவே கடன் வாங்கி இஎம்ஐ செலுத்தி வருபவர்களுக்கும் பொருந்தும். அதாவது கடன்களுக்கான வட்டி விகிதம் மேலும் 2.25 சதவீதம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. அப்படியானால் இனி வரும் காலங்களில் கடன்களுக்கான இஎம்ஐ தொகை அதிகரிக்கும். அதாவது வங்கிகளுக்கான ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் அந்த வங்கிகள் கூடுதல் வட்டியை கட்டவேண்டியிருக்கும்.

பணவீக்கம் காரணமாக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) ஒரே ஆண்டில் 5 வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பணவீக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக ரெப்போ ரேட் விகிதம் 0.35 சதவீதம் அதிகரித்து 6.25 ஆக உயர்த்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

Kathir

Next Post

சமூக வலைதள பழக்கத்தால் பாதை மாறிய இளம் பெண்! தூக்கில் தொங்கிய கணவன்!

Thu Dec 8 , 2022
தற்சமயம் திருமணத்தை கடந்த தவறான உறவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. திருமணத்தை தாண்டிய தவறான உறவு என்பது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் ஆனால் இப்படியான உறவு வெளியில் தெரியாத வரையில் அனைத்தும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இது போன்ற உறவு வெளியில் தெரிந்து விட்டால் பல அசம்பாவிதங்களை நிகழ்த்தி காட்டி விடுகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கழனிவாசல் […]

You May Like