சென்னை அசோக் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது (19) இவருடைய தந்தை சாகுல் ஹமீது இவர் தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் பழைய தங்க நகைகள் மற்றும் செல்போன்களை வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லமுனா மரைக்காயர்( 28) என்பவர் சிறு வயதிலேயே சாகுல் அமீதுவிடம் வேலை பார்த்து வந்தார். சென்ற 5 வருடங்களுக்கு முன்னர் வேலையை விட்டு நின்ற மரைக்காயர் மறுபடியும் சாகுல் ஹமீதுவிடம் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சாகுல் ஹமீது 359 கிராம் நகைகள் மற்றும் 10 ஐபோன்களை லமுனா மரைக்காயரிடம் கொடுத்து பர்மா பஜாரில் உள்ள கடையில் கொடுத்து விட்டு வருமாறு தெரிவித்துள்ளார்.
லமுனா மரைக்காயர் பர்மா பஜார் செல்லாமல் கீழ்த்தளத்தில் தான் தங்கியிருந்த அறையில் அந்த பையை வைத்துவிட்டு, நகை மற்றும் செல்போன்களை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து முஸ்தாக் அகமது அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் மரைக்காயரை தேடி வருகின்றனர்.