fbpx

கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது.. டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..

கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது..

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது..

’கொரோனா தடுப்பூசியால் நிகழும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல’..!! மத்திய அரசு பரபரப்பு பதில்..!!

இந்நிலையில் ஊழியர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தடுப்பூசி போட வேண்டும் கட்டாயப்படுத்தாமல், பாடம் கற்பிக்கவும், பிற பொறுப்புகளை ஏற்கவும் அனுமதி வழங்க வேண்டும் அரசுப் பள்ளி ஆசிரியர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த மனுவை நீதிபதி பிரதீபா எம் சிங் அடங்கிய ஒற்றை நீதிபதி அமர்வு விசாரித்தது. அப்போது கோவிட்-19 தடுப்பூசி போட வேண்டும் என்று நிர்வாகம் ஊழியர்களை கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது..

இனி உணவு சாப்பிடும் நேரம் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும்...! உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!

மேலும் சேவைப் பலன்கள் தொடர்பாக , சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்து கோரிக்கை வைக்க ஆசிரியைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.. இது குறித்து அந்த அதிகாரி 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும் தடுப்பூசி போட வேண்டும் என்று எந்த ஒரு தனிநபரையும் கட்டாயப்படுத்த முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் டெல்லி நீதிமன்றம் சுட்டிக்காட்டியது..

டெல்லி அரசின் கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள கௌதம் பூரியில் உள்ள நியூ உஸ்மான்பூரில் உள்ள அரசு பெண்கள் மூத்த மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.. இவர் கடந்த 2021ல் தொடர்ந்த வழக்கில் தான் நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கி உள்ளது..

Maha

Next Post

உங்க ஆதார் விவரத்தை புதுப்பிக்க அதிக பணம் வசூல் செய்தால் புகார் அளிக்கலாம்...! எப்படி தெரியுமா...?

Thu Jan 26 , 2023
ஆதார் விவரங்களை புதுப்பிக்க உங்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் எப்படி புகார் அளிப்பது என்பதை பார்க்கலாம். இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் இலவசமாக வழங்கப்படும் ஆவணமாகும். ஆதார் அட்டை பயன்படுத்தி எரிவாயு இணைப்புகளை வாங்குவது, முதலீடு செய்வது, வாக்கு செலுத்துவது, ஓய்வூதிய பெறுவது, போன்ற பல்வேறு சேவைகளைப் பெற பயன்படுத்தப்படும் முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதற்கு விவரங்கள் சரியாக இருப்பது முக்கியம். ஆதார் அட்டையை UIDAI இணையதளத்திற்குச் சென்று சேவையை […]
சூப்பரோ சூப்பர்..!! ’ஆதார் கார்டில் ஏதேனும் தவறு இருந்தால் இனி கவலை வேண்டாம்’..!! இதை மட்டும் பண்ணுங்க..!!

You May Like