ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியை வருங்கால வைப்பு நிதி ஆணையம் எங்கெல்லாம் முதலீடு செய்கிறது என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
அதன்படி, வருங்கால வைப்பு நிதி ஆணையம் தன் வசம் உள்ள பி.எஃப். தொகையை கடன் பத்திரங்களிலும், Exchange Traded Funds மூலம் பங்குச்சந்தைகளிலும் முதலீடு செய்கிறது. மத்திய அரசு வழங்கியுள்ள முதலீட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முதலீட்டை அது மேற்கொள்கிறது.
2024 மார்ச் மாத நிலவரப்படி வருங்கால வைப்பு நிதி அலுவலகம் வசம் 24 கோடியே 75 லட்சம் ரூபாய் உள்ளது. இவற்றில் 22 கோடியே 40 லட்சம் ரூபாய் கடன் பத்திரங்களுக்கும், 2 கோடியை 35 லட்சம் ரூபாய் Exchange Traded Funds வழியாக பங்குச்சந்தை முதலீட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதி அலுவலகம் Exchange Traded Funds மூலமாக 2017 – 18 ஆம் நிதியாண்டில் 22 ஆயிரத்து 766 கோடி ரூபாய், 2018 – 19இல் 27 ஆயிரத்து 974 கோடி ரூபாய், 2019 – 2020இல் 31 ஆயிரத்து 51 கோடி ரூபாய், 2020-21இல் 32 ஆயிரத்து 70 கோடி ரூபாய், 2021-22இல் 43 ஆயிரத்து 568 கோடி ரூபாய், 2022-23இல் 53 ஆயிரத்து 81 கோடி ரூபாய், 2023-24இல் 57 ஆயிரத்து 184 கோடி ரூபாய், 2024-25இல் 34 ஆயிரத்து 207 கோடி ரூபாயை பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. நேரடியாக எந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் பங்குகளில் வருங்கால வைப்பு நிதி முதலீடு செய்யப்படுவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.