படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று பொதிகை பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கு பெற உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 8-ஆம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல், மருத்துவம் முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.இம்முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து கிடையாது.