படித்து வேலை வாய்ப்பற்ற இளைளர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 2023-ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மனித வள தேவைக்கு நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அது சமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐ.டி.ஐ,12-வது மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்விசான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான கைப்படத்துடன் 16.06.2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் .