fbpx

1000 பேருக்கு வேலைவாய்ப்பு.. வரும் 20-ம் தேதி நடைபெறும் மாபெரும் சிறப்பு முகாம்…! முழு விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வரும் 20-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 20.12.2024 வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். அதுசமயம் பட்டதாரிகள். டிப்ளமோ ஐ.டி.ஐ. 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே. 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள். பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 20.12.2024 அன்று காலை 09.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறும் மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Employment camp to be held on the 20th for unemployed youth in Kanchipuram district

Vignesh

Next Post

தினமும் பாலில் அரை ஸ்பூன் நெய் கலந்து குடிச்சு பாருங்க.. இவ்ளோ நன்மைகளா..?

Wed Dec 18 , 2024
Mix half a spoonful of ghee in milk and drink it every day.. Are these benefits..?

You May Like