fbpx

2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு!… தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள்!… அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.கணேசன் உறுதியளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வேலைவாய்ப்பு துறையால் தமிழகமெங்கும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இந்த ஆண்டின் இறுதிக்குள் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கல்வி தொலைக்காட்சி வாயிலாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பயனடையும் வகையில், பயிற்சிக் காணொளிகள் ஒளிபரப்பும் திட்டம் முதல்வரால் தொடங்கப்பட்டுள்ளது. இதை அனைத்து போட்டித் தேர்வு ஆர்வலர்களும் பயன்படுத்தி அரசு பணி பெற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதம் 100 சதவீதத்தை எட்ட வேண்டும்.தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு 100 சதவீதம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையை உருவாக்குவதுடன், கிராமப்புற மாணவர்கள் தங்களது நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையிலான திறன் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

Kokila

Next Post

“நகையை திருடுனதுக்கு இப்படியாடா செய்வ” திருடனை கதிகலங்க செய்த போஸ்டர்..

Sun Sep 24 , 2023
திருடப்பட்ட நகைகளை கண்டுபிடிக்க பலர் பல விதமான முயற்சிகளை செய்வது உண்டு. ஆனால் ஈரோட்டில் ஒருவர் திருடுபோன தன் நகைகளை கண்டுபிடிக்க செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம், ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவிலை சேர்ந்தவர் ராமசாமி. கடந்த 15-ம் தேதி இவர் தனது வீட்டை பூட்டி, சாவியை வெளியிலேயே ஒரு இடத்தில் மறைவாக வைத்து விட்டு, தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். யாருக்கும் தெரியாமல் சாவியை மறைத்து […]

You May Like