fbpx

ரூ.43,000 சம்பளத்தில் ஆவினில் வேலைவாய்ப்பு..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் உள்ளே..!!

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பதவியின் பெயர்கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary Consultant)
காலியிடங்கள் 5
கல்வித்தகுதிகால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H with Computer Knowledge
பணி காலம்ஓராண்டு
நிபந்தனைகள்இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்
சம்பளம்ரூ. 43,000

விண்ணப்பதாரர்கள் வரும் 24ஆம் தேதி காலை 11 மணியளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரடி தேர்வு நடைபெறும் இடம்: வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர்-9. தொலைபேசி எண். 93451 61677. இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும்.

Chella

Next Post

மக்களே.‌‌.! சாயக்கழிவு நீரால் ஏற்படும் அபாயம்...! சோதனையில் வெளியான தகவல்...!

Mon Mar 20 , 2023
பூஞ்சைகளினால் உருவாக்கப்பட்ட லாக்கேஸ் என்ற நொதி, ஜவுளித்துறையில் ஆடைகளுக்கு சாயமேற்றிய பிறகு நீர் நிலைகளில் திறந்து விடப்படும் அபாயமான சாயக்கழிவுகளின் மூலக்கூறுகளை சிதைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சாயக்கழிவுகளை இயற்கையான முறையில் சுத்திகரிக்க உதவுவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் பிஸ்வாஸ் மற்றும் டாக்டர்.சுமன் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து இதற்கான சோதனையை மேற்கொண்டுள்ளனர். புற ஊதாக்கதிர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் கணினி […]

You May Like