சென்னையில் இயங்கி வரும் மத்திய அரசின் மின்னணு பரிவர்த்தனை நிலையத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Scientist, Project Associate, Project Assistant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
SETS காலிப்பணியிடங்கள் : தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Scientist, Project Associate, Project Assistant பணிக்கென மொத்தம் 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி : விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech / ME / M.Tech முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28, 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம் : தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு Download Notification PDF என்ற பக்கத்தை பார்வையிடவும்.
Read more ; தாய்மாமன் மகளை 4-வது மனைவியாக்கிக் கொண்ட நடிகர் பாலா..!! இம்முறை நம்புவதாக பேட்டி..!!