இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Wireman, Computer Operator And Programming Assistant பணிக்கு நான்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு அவசியம் இல்லை. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000 முதல் அதிகபட்சம் ரூ.8,500 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Info: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)