3-ம் பாலினத்தவருக்கு பாகுபாடு இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்க நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது..
ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பணிப்பெண் பணிக்கு விண்ணப்பித்த நிலையில், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த ஷானவி பொன்னுசாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.. திருநங்கை என்ற ஒரே காரணத்திற்காக தனக்கு வேலை மறுக்கப்பட்டதாகவும், இது தனக்கு இழைக்கப்பட்ட பாகுபாடு என்று கூறி முறையிட்டிருந்தார்..
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, ஷானவியின் விண்ணப்பம், திருநங்கை என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.. 3-ம் பாலினத்தவருக்கு பாகுபாடு இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்க நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தினர்.
அனைத்து தரப்புனிரிடமும் அடுத்த 3 மாதங்களில் ஆலோசனை நடத்தி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரித்து சமர்ப்பிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. மேலும் 3-ம் பாலினத்தவருக்கு பாகுபாடின்றி வேலைவாய்ப்பு வழங்க புதிய சட்டத்தை இயற்றலாம் என்றும் மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கினர்..