பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்..
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று காலமானார். அவருக்கு வயது 82. மேல் மருத்துவத்தூரில் அறக்கட்டளை மூலம் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர். இந்த நிலையில் இவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்து நிலையில், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. தற்பொழுது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்வதாக அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்; மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, தமிழக பாஜகவின் நிகழ்ச்சிகள் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இன்று நடைபெறவிருந்த திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.