fbpx

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா.! இந்த எனர்ஜி ட்ரிங்க் குடிங்க போதும்.!

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலரும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. மேலும் காலை உணவுகளை தவிர்த்து விட்டு மதிய நேரத்தில் அதிகமாக உண்ணுவது, பகல் நேரத்தில் சாப்பிட்டவுடன் படுத்து தூங்குவது போன்ற ஒரு சில பழக்கங்களும் உடல் எடையை அதிகரிக்கும்.

இவ்வாறு உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்தாலும் சரியான உணவு பழக்கங்கள் இல்லாவிட்டால் உடல் எடையை குறைப்பது மிகவும் சிரமம். தினமும் அதிகமாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதை குறைக்க வேண்டும். இதற்கு பதில் தினமும் காலையில் பழங்களினலான ஊட்டச்சத்து நிறைந்த எனர்ஜி ட்ரிங்க் குடித்து பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பழ வகையை எடுத்துக்கொண்டு அதனுடன் தேங்காய் பால், பாதாம் பால், சோயா பால் இது போன்ற ஏதாவது ஒரு பால் வகையை சேர்த்து உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா போன்ற ஏதாவது ஒரு நட்ஸ் வகையை சேர்த்துக் கொள்ளலாம். இதனை ஒன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தும் கிடைக்கும். நீண்ட நேரம் பசி எடுக்காமல் உடல் எடையும் குறையும்.

இவ்வாறு தினமும் காலையில் இந்த எனர்ஜி ட்ரிங்க் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைவதோடு, உடலில் இரும்பு சத்து அதிகரிக்கும். மேலும் காலை உணவை அவசர அவசரமாக சாப்பிடாமல் செல்பவர்களுக்கு இந்த எனர்ஜி ட்ரிங்க் ஒரு வரப்பிரசாதமாகவும் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறி வருகின்றனர்

Rupa

Next Post

செவ்வாய் கிரகத்தில் பழங்கால ஏரி இருந்தது உறுதி !… புகைப்படத்தை வெளியிட்ட நாசாவின் ரோவர்!

Sun Jan 28 , 2024
செவ்வாய் கிரகத்தின் ஜெரெசோ பள்ளத்தில் பழங்கால ஏரி வண்டல்களின் சான்றுகள் இருப்பதை நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் புகைப்படங்கள் எடுத்து அனுப்பியுள்ளது. இது நீர் மற்றும் நுண்ணுயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்குகிறது. இந்த பிரபஞ்சத்தில் பூமியைத் தாண்டி மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் எங்கே இருக்கின்றது வேறு கிரகங்களில் உயிரினங்கள் இருக்கின்றதா என்பது போன்ற கேள்விகளும் அதற்கான தேடல்களும் பல நூறு ஆண்டுகளாக நடந்து வருகின்றன. பல கிரகங்களுக்கு விண்கலங்கள் சென்று ஆராய்ச்சி […]

You May Like