fbpx

கோகுலம் சிட்பண்ட்ஸில் அமலாக்கத்துறை ரெய்டு..!! கட்டுக்கட்டுக்காக சிக்கிய ரூ.1.5 கோடி..!! யார் இந்த கோகுலம் கோபாலன்..?

கோகுலம் சிட் பண்ட்ஸ் தொடர்பான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கோகுல் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2017 ஆம் ஆண்டு கோகுலம் சிட்பண்ட்ஸ் தொடர்பாக 78 கிளைகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் அடிப்படையில் பல்வேறு ஆவணங்கள் அமலாக்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனரும், எம்புரான் திரைப்பட தயாரிப்பாளருமான கோகுலம் கோபாலனின் அலுவலகம் மற்றும் நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதோடு கேரளாவில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் ரூ.1.50 கோடி ரொக்க பணமும், பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான புகாரின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் இந்த கோகுலம் கோபாலன்..?

எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் கோபாலனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், அவர் யார் என்பதை பார்க்கலாம். 80 வயதான கோகுலம் கோபாலன் கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சினிமா ஆகிய துறைகளில் கால் தடம் பதித்த இவர், கோகுலம் சிட்பண்ட்ஸ் நிதி நிறுவனத்தின் அதிபராக அனைவராலும் அறியப்படுகிறார். 1960-களில் சென்னைக்கு நடிகராக வேண்டும் என்ற கனவில் வந்த கோபாலன், பின்னர் நிதி நிறுவனங்களை தொடங்கி தொழிலதிபர் ஆனார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான மம்முட்டியின் பழசி ராஜா திரைப்படத்தை தயாரித்த இவர், தொலைக்காட்சி சேனல்களையும் நடத்தி வருகிறார்.

Read More : ’இனி கிரைய பத்திரங்களை பொதுமக்களே தயாரிக்கலாம்’..!! பதிவுத்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

The Enforcement Directorate has said that Rs 1.50 crore has been seized in raids conducted at locations related to Gokulam Chit Funds.

Chella

Next Post

White Hair | இளம் வயதிலேயே நரைமுடியா..? இனி கவலையே வேண்டாம்..!! கைவசம் 5 விஷயம் இருக்கு..!!

Sun Apr 6 , 2025
In the past, gray hair was a common occurrence among the elderly, but nowadays, it is increasingly affecting young people.

You May Like