அர்வா ஹெல்த் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டிபாலி பஜாஜா, தனது நிறுவனத்தின் இன்ஜினியர் வேலைக்கான விண்ணப்பங்களை வெளியிட்டிருந்தார். அந்த விண்ணப்பத்தில் “நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவரா என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அதற்கு இளைஞர் ஒருவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நபர் அளித்த பதில் என்னவென்றால், “ இந்த வேலைக்கு தேவையான தனித்துவமான திறமைகள் என்னிடம் இருப்பதாக நான் நம்புகிறேன். மேலும் எனக்கு இந்த வேலை கிடைக்கவில்லையென்றால், என் காதலியை நான் திருமணம் செய்து கொள்ள முடியாது. ஏனென்றால் உனக்கு வேலை இருந்தால் மட்டுமே, அவளை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று அவளுடைய தந்தை கூறுகிறார்” என்று தெரிவித்திருந்தார்.
இவரின் பதிலை அர்வா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதற்கு பலரும் தங்கள் கருத்தக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு வேலை கிடைத்ததா, இல்லையா என்ற தகவல் குறிப்பிடப்படவில்லை.
Read more ; லோ பட்ஜெட்ல தேனியில் சுற்றிபார்க்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!