இந்தியாவின் வட மாநிலங்களை உற்று நோக்கினால் தமிழகம் எவ்வளவோ மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு வட மாநிலங்களில் பல கொடூர சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள முர்கு பகுதியை சார்ந்தவர் கானுமுண்டா(24). பழங்குடியினத்தை சார்ந்த இவருக்கு அந்த பகுதியில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே அதே பகுதியைச் சார்ந்த சாகர்(25) என்ற நபர் கானுமுண்டா நிலத்தை அபகரிக்க கடந்த 3 வருடங்களாக முயற்சி செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் கானு எதிர்தரப்பினரின் முயற்சிகளை சட்டரீதியாக தொடர்ந்து முறியடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கோபமற்ற சாகர் அடியாட்களை வைத்து அடிப்பது, மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இருந்தாலும் அவருடைய மிரட்டலுக்கு கானு அடிபணியவில்லை.
இந்த சூழ்நிலையில் தான் சில தினங்களுக்கு முன், இரவு தன்னுடைய நிலத்தை காவல் காப்பதற்காக அந்த பகுதிக்கு கானுமுண்டா சென்று இருக்கிறார். அவர் அங்கே தனியே உறங்கியதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட சாகர் மற்றும் அவருடைய நண்பர்கள் அந்த பகுதிக்கு ஒரு குழுவாக சென்று அரிவாள் , கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்பு கானு முண்டாவின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்து, பின்னர் அவருடைய தலையை 15 கிலோ மீட்டருக்கு அப்பால் வீசி சென்றுள்ளனர். அடுத்த நாள் காலை கானுமுண்டா கொலை செய்யப்பட்டிருப்பதை தெரிந்து கொண்ட அவருடைய உறவினர்கள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கினர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் அவருடைய உடலையும், தலையையும் கைப்பற்றியுள்ளார்கள். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக, சாகர் மற்றும் அவருடைய நண்பர்கள் தான் இந்த கொலையை செய்திருக்கிறார்கள் என்ற விவரம் காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இங்கிருந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் பீகார் மாநிலத்திற்கு தப்பிச்செல்ல முயற்சி செய்த சாகர் மற்றும் அவருடைய மனைவி உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். அவர்களின் கைபேசிகளை சோதனை செய்த சமயத்தில் கானு முண்டாவை கொலை செய்து விட்டு அவருடைய தலையுடன் அவர்கள் தனித்தனியே சிரித்தபடி செல்பி எடுத்ததும் தெரியவந்துள்ளது. குற்றவாளிகள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.