அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியைச் சேர்ந்த பேட்ரிசியா என்ற 64 வயது மூதாட்டி ஒருவர், இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுற்றுலாவை முடித்த அந்த மூதாட்டி, புதுச்சேரி மாநிலத்திற்கும் வந்திருக்கிறார். அப்போது, புஸ்ஸி வீதியில் பெண்களுக்கான அழகு சாதனக்கடை நடத்தி வரும் வடஇந்திய இளைஞர் மேக்ராஜிற்கும், அந்த மூதாட்டிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று வடஇந்திய இளைஞரை தனது அறைக்கு வரும்படி மூதாட்டி பேட்ரிசியா செல்போனில் அழைத்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த இளைஞருடன் அந்த மூதாட்டி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். ஒருகட்டத்தில் போதும் என மூதாட்டி சொல்லியிருக்கிறார். ஆனால், அதை காதில் கூட வாங்காத இளைஞர் மேக்ராஜ், அந்த மூதாட்டியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.

பின்னர், பிறப்புறுப்பில் அதிக வலி ஏற்பட்டதால், அந்த மூதாட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், நடந்தவற்றை அறிந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தி விருப்பப்பட்டு உடலுறவு வைத்துக் கொண்டாலும், மூதாட்டி நிறுத்தக்கூறிய போது, அதையும் மீறி வலுக்கட்டாயமாக உறவில் ஈடுபட்டதால் மேக்ராஜ் மீது பாலியல் பலாத்கார வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.