fbpx

விலகி இருந்தது போதும்.. இனி என் முதல் காதலனுடன் வாழப் போகிறேன்..!! – சமந்தாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்

தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த சமந்தா கோலிவுட்டில் நடிகையாக தனது கரியரை தொடங்கினார். இங்கு அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தொடர்ந்து தெலுங்கிலும் நடித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த போது, அந்தப் படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவுடன் சமந்தாவுக்கு காதல் ஏற்பட்டது.

இவர்களின் காதலுக்கு நாக சைதன்யாவின் குடும்பத்தினர் முழு சம்மதம் தெரிவித்த நிலையில், இருவரும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது முன்னாள் கணவர் மூன்று வருடங்களுக்கு பிறகு ஷோபிதவை திருமணம் செய்து கொண்டதிற்கு பலர் விமர்சனங்களை தெரிவித்தனர்.

ஆனால் சமந்தா, ஒரு பக்கம் மையோசைட்டிஸ் நோய்க்கு சிகிச்சை, இன்னொரு பக்கம் சினிமா என தன்னுடைய பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமந்தாவின் நடிப்பில் கடைசியாக சிட்டாடல் ஹனிபன்னி வெப் சிரீஸ் வெளியானது. அது ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அவர் அடுத்ததாக புதிய வெப் சீரிஸில் நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சியில் சமந்தா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில், “நான் தற்போது ராஜ் மற்றும் டிகே-வின் ரக்த பிரஹ்மத் தொடரை முதலில் முடிக்க வேண்டும். அதன்பின்  ஒன்று அல்லது இரண்டு மாதங்களில் வேறொரு படம் உள்ளது. இனி இடைவேளை இல்லை. நான் திரைப்படத்தில் இருந்து விலகிய காலமெல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் சினிமா தான் என் முதல் காதல் அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சமந்தா கம்பேக் கொடுக்க போவதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளனர்.

Read more : ’பணத்துக்காகத்தான் இப்படி பண்றாங்கன்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்’..!! நிக்கி கல்ராணியுடனான விவகாரத்து குறித்து ஆதி ஓபன் டாக்..!!

English Summary

Enough of being away.. Now I’m going to live with my first boyfriend..!! – samantha

Next Post

’சந்தேகப்படுறியா’..? கணவனின் கண்களில் பெவிகால்..!! தீவைத்து எரித்துக் கொன்ற கொடூர மனைவி..!! நீலகிரியில் அதிர்ச்சி

Thu Feb 27 , 2025
Police have arrested and imprisoned a brutal wife who poured Bevilacqua in her husband's eyes and set him on fire after she suspected him of her behavior.

You May Like