fbpx

பெங்களூருவில் நீர்வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் ….முன்னறிவிப்பின்றி அதிரடியாக கட்டிடங்களை இடத்தது மாநகராட்சி ….

பெங்களூருவில் ஏரிகள் , மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமித்து விதிமுறை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதால்தான் மழையால் பெரு வெள்ளம் ஏற்பட்டது. எனவே இது போன்ற நிலை ஏற்படாமல் தடுக்க .. நோட்டீஸ் இல்லாமல் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளியது.

பெங்களூரு மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஆடிப்போனது. ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. இதையடுத்து எந்த அறிவிப்பும் கொடுக்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்றம் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது. மகாதேவபுராவில் சின்னப்பள்ளி – முன்னேகொல்லலா ஏரி வழியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடடங்கள் இடிக்கப்படடன.

இது குறித்து தலைமை பொறியாளர் பசவராஜ் கபடே கூறுகையில் ’’ 20 கட்டிடங்கள் இந்த ஸ்பைஸ் கார்டன் மற்றும் 5 கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளது. வருவாய்த்துறை 7 நாளுக்கு முன் வீட்டை அகற்றுவது குறித்து முடிவு எடுத்து நோட்டீஸ் அனுப்பியது. இதை அகற்றியபின்னர் இங்கு வடிகால் வசதி செய்யப்படும் ’’ என்றார்.

நடுத்தரவர்க்கத்தை குறிவைக்கின்றதா ? : பெரிய பெரிய தொழில் பூங்காக்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை குறிவைக்கவில்லையே , சாதாரண நடுத்தர வர்க்கத்தை மாநகராட்சி அதிகாரிகள் குறி வைக்கின்றனர். பாகமனே தொழில் பூங்காவில் 2.4 மீட்டர் வடிநீர் வாய்கால் ஐ.டிபூங்காவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தை சோதனை செய்த அதிகாரிகள் அதை அகற்றாமல் வேறொரு அமைப்பை இடித்து தள்ளுகின்றனர். என பொதுமக்கள் கூறியுள்ளனர். இது மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் நடக்கும் வேலையா? இல்லை தொழில்பூங்காங்காக்களை காப்பாற்ற வேண்டும என்ற எண்ணத்தில் நடக்கின்றதா-…. என்கின்றனர்

’’  நடுத்தர மக்களை மட்டுமே அரசு குறிவைக்கின்றது. ஏன் வில்லாக்களை குறி வைக்கவில்லை? புல்டோசன் அமைதியாக செல்கின்றது ’’ என காங்கிரஸ் கட்சி தலைவர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

ஆனால் அரசு வெளியிட்டுள்ள தகவல்படி , அனைத்து ஆக்கிரமிப்புகளையும் ,அது ஐ.டி. பூங்காவானாலும் பரவாயில்லை , சிறிய வீடானாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளது.

.‘‘ ஏற்கனவே இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் சட்டப்படிதான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நாங்கள் நிறுத்தமாட்டோம் . ஐ.டி. பி.டி., யார் ஆக்கிரமித்திருந்தாலும் எந்த கேள்வியும் இன்றி யாருக்காகவும் இந்த விஷயத்தில் பாரபட்சம் பார்க்கப்போவதில்லை’’ என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

Next Post

சென்செக்ஸ் மீண்டும் 60,000 புள்ளிகளை கடந்தது… நிஃப்டி 17,980 புள்ளியை தொட்டுவிட்டு 17,931ல் வர்த்தகம் ….நாளை ’’ 17,920 ’’ பிரேக் ஆகுமா? …

Mon Sep 12 , 2022
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் கடந்து 60,115 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 62,148 புள்ளிகள் வரை உயர்ந்து பின்னர் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இறங்குமுகமாகவே இருந்தது. 57,423 புள்ளிகள் வரை கீழ் இறங்கிய பங்குச்சந்தை ஆகஸ்ட் மாதம் முதல் ஏறுமுகமாகசென்று கொண்டிருக்கின்றது. இன்று 322 புள்ளிகள் உயர்ந்து 60,000 புள்ளிகளை கடந்த […]

You May Like