fbpx

தமிழகத்தில் நாளை ஊழியர்கள் வேலை நிறுத்தம்… பேருந்துகள் இயங்குமா…? போக்குவரத்துத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு…!

தமிழகத்தில் நாளை போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளது முன்னிட்டு அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை உறுதி செய்ய வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத்துறை சார்பில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன; அதில், அனைத்து பேருந்து சேவைகளும் வழக்கமான அட்டவணையின்படி இயக்குவதை உறுதி செய்ய வேண்டும். பணிமனைகளில் பேருந்து பாதுகாப்பினை உறுதி செய்ய போதிய அளவு மின் வெளிச்சம் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தேவை ஏற்படின் கூடுதல் மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும்.பணியாளர்களுக்கு பாதுகாப்பாற்ற இடங்களில் பேருந்தை நிறுத்தக்கூடாது.

பணிமனைக்கு காவல்துறை பாதுகாப்பு பெறுவதை உறுதி செய்ய வேண்டும். பேருந்து சேவை குறித்த விவரங்கள் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அரசிற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால், 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டுப்பாட்டு அறைக்கு பேருந்து குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும்.ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பேருந்து சேவையை இயக்கும் போது பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: #School Fees: இனி யாருக்கும் கவலை வேண்டாம்… இவர்கள் எல்லோருக்கும் பள்ளி கட்டணம் தமிழக அரசே செலுத்தும் என அறிவிப்பு…!

Vignesh

Next Post

பெரும் பரப்பரப்பு... தமிழகத்தை உலுக்கிய 3 பேர் கொலை வழக்கில் 27 பேர் குற்றவாளிகள்...! மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு...!

Tue Aug 2 , 2022
சிவகங்கை கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் கொலை வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி நள்ளிரவில், ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதிக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு பிரிவினர், சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்டனர். 5 பேர் படுகாயமடைந்தனர். […]
டெண்டர் முறைகேடு வழக்கு..! சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்துபோன எஸ்.பி.வேலுமணி..!

You May Like