fbpx

என்ட்ரியான எரிஸ் வைரஸ்.. கொரோனா விட கொடிய வைரஸா??

கடந்த 2019 ஆம் ஆண்டு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது.

கடந்த சில நாட்களாக கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) என்ற வைரஸ் பிரிட்டனில் அதிவேகமாக பரவி வருகிறது. ஒமிக்ரான் வைரஸின் துணை பிரிவாக இந்த எரிஸ் வைரஸ் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எரிஸ் வைரஸ்தான் அதிக ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸாக உள்ளதும் மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த புதிய வகை எரிஸ் வைரஸ் கடந்த மே மாதமே இந்தியாவில் கண்டறியப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் அவை எரிஸ் வைரஸ் அல்ல என்றாலும் மருத்துவமனைகள் இனி நோய் தொற்றை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்றும் டாக்டர் ராஜேஷ் கார்யகார்டே தெரிவித்துள்ளார். பிரட்டனில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவருக்கு எரிஸ் வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

கமல்-ஐ பற்றி கௌதமிக்கு மட்டும் தெரிந்த இரகசியம்.!

Thu Aug 10 , 2023
தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கௌதமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழித் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களிடம் இணைந்து நடித்துள்ளார்.கமலுடன் பாபநாசம் படத்திற்கு பிறகு கௌதமி தற்பொழுது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சந்திப் பாட்டியா என்னும் தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து, அடுத்த ஆண்டே இருவருக்கும் […]

You May Like