ஓய்வூதியம் பெறுபவர்களின் உயிருடன் இருப்பதற்க்காண இன்றியமையாத ஆவணம் ஆயுள் சான்றிதழாகும், இது அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய விநியோகஸ்தர், வங்கி அல்லது தபால் அலுவலகம் போன்ற ஏஜென்சியிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும், மேலும் ஓய்வூதியம் பெறுபவரின் பணியிடத்தில் அவரது மரணத்திற்குப் பிறகு பணம் செலுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்கிறது. ஓய்வூதியம் வழங்குவதற்கு முன், வழக்கமாக வருடத்திற்கு ஒருமுறை தேவைப்படும் இந்தச் சான்றிதழை வழங்குவதற்கு அரசாங்கமும் காப்பீட்டு நிறுவனங்களும் அறிவுறுத்துகின்றன.
இதற்கு முன்பு இந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றால் வங்கிகள் அறிவிக்கும் தேதியில் மட்டுமே ஓய்வூதியதாரர்கள் சமர்ப்பித்து வந்தனர் . தற்பொழுது வெளியிட்ட அறிவிப்பின்படி ஓய்வூதியதாரர்கள் ஒரு வருடத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் ஓய்வூதியத் திட்டம்-1995 என்பது ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வழங்கும் ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ், ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பிறகு ஓய்வூதியம் பெறலாம். இந்தத் திட்டம் 1995 இல் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 – ரூ. 2000 வரை நிலையான குறைந்தபட்ச ஓய்வூதியத்தைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல், இதில் பல வசதிகள் உள்ளன. திட்டத்தின் பலன்களைப் பெற, ஒரு ஊழியர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சேவையை முடித்திருக்க வேண்டும், அது தொடர்ச்சியான சேவையாக இருக்க வேண்டிய அவசியமில்லை.