ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வாடிக்கையாளர்களின் வசதிக்காக சில சேவைகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது, அதன் படி, வாடிக்கையாளர்கள் அந்த புதிய சேவைகளை தங்கள் வீட்டில் இருந்தே முடியும். ஓய்வூதியம் பெறுவோர், அந்தச் சேவைகளைப் பெற, அருகில் உள்ள எந்தவொரு அலுவலக கிளைக்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஆன்லைனில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இபிஎப்ஓ வழங்கும் சேவைகள்:
ஓய்வூதிய கோரிக்கைகளை UMANG ஆப் மூலம் அல்லது ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் ஓய்வூதிய பாஸ்புக்கை ஆன்லைனில் பார்த்துக் கொள்ளலாம்.டிஜி-லாக்கரில் இருந்து ஓய்வூதிய கட்டண உத்தரவை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்து டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகம்
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசிய மின் ஆளுமைப் பிரிவு ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட UMANG செயலி, இந்தியாவில் மொபைல் ஆளுகையை இயக்க உள்ளது. UMANG ஆனது அனைத்து இந்திய குடிமக்களுக்கும் மத்தியிலிருந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற குடிமக்களை மையப்படுத்திய சேவைகள் வரையிலான இந்திய மின்-அரசு சேவைகளை அணுகுவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. ஆதார் அட்டை பயனர்களின் வசதிக்காக, UMANG ஆப் ஆனது குடிமக்களை மையமாகக் கொண்ட புதிய சேவைகளைச் சேர்த்துள்ளது.
UMANG செயலியைப் பதிவிறக்குவதன் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம். 97183-97183 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் உங்களுக்கான சேவை வழங்கப்படும்.