தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களின் சம ஊதியம் வழங்குவதற்கான கோரிக்கை குறித்து ஆய்வு செய்து அறிக்கையை சமர்பிப்பதற்கான குழு அமைத்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில்; இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஆய்வு செய்ய நீதித்துறை செயலாளர் தலைவராகவும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இந்த குழுவின் பணிகளுக்கு தேவையான உதவிகள் மற்றும் குழு தலைவர் உறுப்பினர் தேவைக்கேற்ப கூட்டத்தை ஏற்பாடு செய்ய தொடக்க கல்வி இயக்குனருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.