fbpx

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. நாளை வாக்குப்பதிவு.. முன்னேற்பாடுகள் தீவிரம்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன..

2021 சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த டிசம்பர் 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது..

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா, சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்..

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நாளை (பிப்ரவரி27) நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒட்டி 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டுக் கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளன. வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் மற்றும் அவா்களுக்கு வீல் சேர் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது ஈரோட்டில் தற்போது பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வாக்காளா்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்பதால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் 1,10,713 ஆண் வாக்காளா்கள், 1,16,140 பெண் வாக்காளர்கள், 23 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 2,26,898 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனா். இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன..

Maha

Next Post

அதிமுக பொது குழு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு……! சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக அமரப்போவது யார்…..?

Sun Feb 26 , 2023
சமீபத்தில் அதிமுக பொதுகுழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ காத்திருக்கிறது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வத்திற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி வழங்க வேண்டும் எனவும், பன்னீர்செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்பட வேண்டும் எனவும் […]
”பாடைகட்டி மாலையுடன் வந்துருங்க”..! ஆர்.பி.உதயகுமாருக்கு மிரட்டல் விடுத்த ஓபிஎஸ் ஆதரவாளர்..!

You May Like