ஈரோட்டில் ஆற்றல் பவுண்டேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் நிறுவனர் அசோக்குமார் பள்ளி மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்து வருகிறார்.
நோய் தொற்று காலத்தில் பொதுமக்கள் உணவுக்கு சிரமப்பட்டதை நினைவு கூர்ந்து 10 ரூபாய்க்கு காலை, மாலை மற்றும் இரவு போன்ற வேளைகளில் உணவு வழங்கும் விதத்தில் ஆற்றல் உணவகம் என்ற பெயரில் உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சாப்பிடும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த உணவகத்தில், உணவை வீணாக்க கூடாது என்ற கண்டிப்புடன் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
முதலில் இலவசமாக உணவு வழங்க தான் திட்டமிடப்பட்டது. ஆனால் இலவச உணவு என்றால் மக்களுக்கு உணவு மீதும் மதிப்பிற்காக என்ற காரணத்தால் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார். இந்த உணவகத்திற்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து ஈரோட்டின் மற்ற பகுதிகளிலும் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.