தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இருவார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் நடைபெற உள்ளது
தொழிலாளர் அரசுக் காப்பீட்டுக் கழகத்தின் சிறப்பு சேவைகள் இரு வார விழாவையொட்டி குறைதீர்ப்பு நாள் இன்று சென்னையின் கே.கே நகரில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மதியம் 2 மணி முதல் 4 மணிவரை 2 வது தளத்தில் உள்ள கல்லூரி கவுன்சில் ஹாலில் நடைபெறுகிறது.
பயனாளிகள், தொழிலாளர்கள், துறைசார்ந்தவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி அவர்களின் குறைகளை விரைவாக தீர்த்துக் கொள்ளலாம் என்று துணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்