fbpx

யூரோ 2024!. அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள்!.

EURO 2024: யூரோ 2024 காலிறுதி போட்டியில் ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியும், துருக்கி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணியும் அரையிறுதிக்குள் நுழைந்தன.

2024 யூரோ கால்பந்து தொடரின் காலிறுதி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 3வது காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. ஸ்விட்சர்லாந்து அணியில் Breel Embolo 75வது நிமிடத்திலும், இங்கிலாந்து அணியில் Bukayo Saka 80வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்த நிலையில், கூடுதல் நேரம் கொடுத்தான் இரு அணிகளும் வெற்றிக்கான இரண்டாவது கோலை அடிக்கவில்லை. இதையடுத்து, பெனால்டி ஷூட்அவுட்டில் இங்கிலாந்து அணி அணைந்து 5 கோல்களையும் அடித்து ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.

ஸ்விட்சர்லாந்து அணி பெனால்டி ஷூட்அவுட்டில் நான்கு முயற்சிகளில் ஒன்றை இழந்த நிலையில், அரையிறுதிக்கான வாய்ப்பை தவறவிட்டது. இங்கிலாந்து அணியில் Trent Alexander-Arnold வெற்றிக்கான ஐந்தாவது பெனால்டி ஷூட்அவுட்டை கோலாக மாற்றி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதேபோல், பெர்லினில் நடந்த 4வது காலிறுதிப்போட்டியில் 2-1 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து, வரும் வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து எதிர்கொள்கிறது.

Readmore: ’10 வருஷமா ஒரே ரூம்ல அப்படி இருந்தோம்’..!! ’இப்போ வேற ஒருத்திக் கூட இருக்காரு’..!! பிரபல நடிகர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்..!!

English Summary

EURO 2024: England, Netherlands entered the semi-finals!

Kokila

Next Post

இனி இதற்கெல்லாம் தடை...! நாடு முழுவதும் அமலுக்கு வந்த புதிய ரூல்ஸ்...!

Sun Jul 7 , 2024
Prohibition of use of equipment that interferes with telecommunications.

You May Like