விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில், கடந்த 3 சீசன்களாக பிரபல தயாரிப்பாளரும், யூடியூப் விமர்சகருமான ரவீந்தர் சந்திரசேகர் பெயர் அடிபட்டு வந்தாலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்றே கருதப்பட்டது. ஆனால், முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் ரவீந்தர் சந்திரசேகர்.
வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் முதல் வாரத்திலேயே எவிக்ட் செய்யப்பட்டார். சமீபத்தில் தனது எக்ஸ் தளத்தில் நிகழ்ச்சியைப் பார்ப்பவர்களுடன் தொடர்பில் இருந்தார். இதற்கிடையே, அவர் மற்றும் விஷ்ணுவுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவாதத்தின் போது, ரவீந்தர் முத்துக்குமரனை ஆதரித்து, செளந்தர்யாவை விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு விஷ்ணு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். மேலும், விஷ்ணு ரவீந்தரின் மனைவி மகாலட்சுமிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு, ரவீந்தர் தொடர்ச்சியாக இவ்வாறு பேசுவது தவறு என கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மகாலட்சுமி இதை ரவீந்தரிடம் கூறியுள்ளார். நேற்று நடந்த விவாதத்தில், ரவீந்தர் மீண்டும் முத்துக்குமரனை ஆதரித்து பேசியுள்ளார்.
அப்போது, திடீரென விஷ்ணு குறுக்கிட்டு தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். இதனால், ரவீந்தர், “நீ செளந்தர்யாவுக்கு பிஆர் வேலை பார்க்கிறாய் என்று தெளிவாக தெரிகிறது. ஆனால், நான் முத்துக்குமரனை ஆதரிக்கிறேன். ஏனென்றால், விளையாட்டில் அவர் உண்மையாக இருக்கிறார்” என்று தெரிவித்தார். மேலும், “நீ என் மனைவிக்கு பேசிய ஆடியோ என்கிட்ட இருக்கு. அதை லீக் செய்யவா?” என விஷ்ணுவை ரவீந்தர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
Read More : தவெகவினருக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்..!! இனி யாரும் இதை பண்ணக் கூடாது..!! வெளியான பரபரப்பு அறிக்கை..!!