fbpx

’என் மனைவி கூட என்னை இவ்வளவு திட்டல’..!! ’ஆனா, ஆளுநர் தினமும்’…!! கிண்டலடித்த அரவிந்த் கெஜ்ரிவால்..!!

’துணைநிலை ஆளுநர் என்னை தினமும் திட்டும் அளவுக்கு கூட, என் மனைவி என்னை திட்டுவதில்லை’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி துணைநிலை கவர்னராக இருப்பவர் வினய் குமார் சக்சேனா. இவர் கடந்த மே மாதம்தான் பொறுப்பேற்றார். அது முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் புதிய கலால் கொள்கை, மருத்துவமனை கட்டுமானம், வகுப்பறை கட்டுமான உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த செவ்வாய்க்கிழமையன்று பி.எஸ்.இ.எஸ். டிஸ்காம்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கிய மின் மானியத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு கவர்னர் வினய் குமார் சக்சேனா, தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார். இதனால் ஆம் ஆத்மி அரசுக்கும், டெல்லி துணை நிலை கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

’என் மனைவி கூட என்னை இவ்வளவு திட்டல’..!! ’ஆனா, ஆளுநர் தினமும்’...!! கிண்டலடித்த அரவிந்த் கெஜ்ரிவால்..!!

இந்த சூழ்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில், ’துணைநிலை கவர்னர் என்னை தினமும் திட்டும் அளவுக்கு, என் மனைவி கூட என்னை திட்டுவதில்லை. கடந்த 6 மாதங்களில் அவர் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் அளவுக்கு, என் மனைவி கூட எனக்கு எழுதியதில்லை. துணைநிலை கவர்னர் சாஹிப், கொஞ்சம் சாந்தமாக இருங்க, உங்கள் சூப்பர் முதலாளியிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள் என்று சொல்லுங்கள்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

’நமீதாவின் உடல் மிகவும்’..! வர்ணித்து பேசிய பயில்வான்..! வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

Fri Oct 7 , 2022
பயில்வான் ரங்கநாதன் குறித்து பிரபல காமெடி நடிகர் டெலிஃபோன் ராஜ் கடுமையாக தாக்கி பேசியுள்ளார். சினிமாத் துறையை சார்ந்த நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை, படங்களில் நடிப்பது பற்றி அவதூறாக பேசி அசிங்கப்படுத்தி வருகிறார் பயில்வான் ரங்கநாதன். ஒரு பத்திரிகையாளராகவும், நடிகராகவும் இருந்துள்ள பயில்வான், இப்படி கேவலமாக நடந்து கொண்டதை பலரும் கண்டித்து புகாரும் அளித்து வந்தனர். அதை மீறியும் பயில்வான் ரங்கநாதன் கடும் விவாதங்களையும், கருத்துக்களையும் கூறி […]
’நமீதாவின் உடல் மிகவும்’..! வர்ணித்து பேசிய பயில்வான்..! வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!

You May Like