fbpx

’தாலியை கழற்றுவது கூட கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்’..! சென்னை ஐகோர்ட் நீதிபதிகள்..!

கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டது கூட, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’என் மனைவி அரசுப் பள்ளி ஆசிரியையாக உள்ளார். எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி, அவர் என்னை மனரீதியாக துன்புறுத்தி வருகிறார். எனவே, மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’ என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்தும், தனக்கு விவாகரத்து வழங்கக் கோரியும், பேராசிரியர் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேலுமணி, சௌந்தர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

’தாலியை கழற்றுவது கூட கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம்’..! சென்னை ஐகோர்ட் நீதிபதிகள்..!

அப்போது, பணியிடத்துக்கு சென்று, கணவரை பற்றி அவதூறு பரப்பியது, மனரீதியில் துன்புறுத்துவதற்கு சமம். மேலும், வழக்கு விசாரணையின்போது, கணவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றி விட்டதாக மனைவி கூறியதும் கூட, கணவரை மனரீதியாக துன்புறுத்துவதற்கு சமம். எனவே, கணவருக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது. தாலி என்பது கணவன் உயிருள்ள வரை பெண்கள் அணிந்திருக்கும் நிலையில், அவரை பிரிந்ததும் தாலிச் சங்கிலியை கழற்றியது சம்பிரதாயமற்ற செயல்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Chella

Next Post

ஆபத்தில் தள்ளிய செல்ஃபி மோகம்..! கரைபுரண்டு ஓடும் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள்..!

Sun Jul 17 , 2022
ஆபத்தை உணராமல் காவிரி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள் பெரும் போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடி எட்டியதை அடுத்து, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய நிலையில், ஆபத்தை உணராமல் 3 இளைஞர்கள் ஆற்றின் நடுப்பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளனர். ஆனால், சில நிமிடங்களில் நீர்வரத்து அதிகரித்ததால், பாறையின் மீது […]
ஆபத்தில் தள்ளிய செல்ஃபி மோகம்..! கரைபுரண்டு ஓடும் காவிரி வெள்ளத்தில் சிக்கிய 3 இளைஞர்கள்..!

You May Like