fbpx

’நீ இருந்தா அவ கூட வாழ முடியாது’..!! திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை கொன்று நதியில் தூக்கிப் போட்ட காதலன்..!!

கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் துங்கபத்ரா நதியில் மார்ச் 6ஆம் தேதி இளம்பெண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அந்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் 22 வயது பெண் சுவாதி என்பதும், இவர், ஹாவேரி மாவட்டத்தின் ரட்டிஹள்ளி தாலுகா மசூருவைச் சேர்ந்த ரமேஷ் ப்யாடாகியின் மகள் என்பதும் தெரியவந்தது.

கடந்த மார்ச் 3ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய சுவாதி, அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மார்ச் 7ஆம் தேதி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், சுவாதியும், நயாஸ் (28) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். ஆனால், சுவாதியை கழட்டிவிட்டுவிட்டு, நயாஸ் தனது மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய முயன்றார். இதனால், சுவாதி சண்டையிட்டுள்ளார்.

இதனால், ஏற்பட்ட ஆத்திரத்தில் சுவாதியை தீர்த்துக் கட்ட தனது நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார் நயாஸ். அதன்படி, சுவாதியை சுவர்ணா பூங்காவுக்கு அழைத்துச் சென்று, அங்கு காலியாக இருந்த பள்ளிக்கூடத்தில் புடவையால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர், உடலை இரவு 11 மணிக்கு காரில் கொண்டு சென்று துங்கபத்ரா நதியில் தூக்கிப் போட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் காதலன் நயாஸ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் வினாயக் மற்றும் துர்கா சாரி பதிகரை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : TN Govt | தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வெளியான ஜாக்பாட் அறிவிப்புகள்..!! இனி பண மழை கொட்டப் போகுது..!!

English Summary

Swathi was taken to a park and murdered by strangling her with a saree in an empty school building.

Chella

Next Post

Tamilnad Mercantile வங்கியில் மாதம் ரூ.72,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sat Mar 15 , 2025
Tamilnad Mercantile Bank has issued an employment notification to fill vacant positions.

You May Like