’அதிமுகவின் பொதுச்செயலாளராக ஸ்டாலின் கூட ஆகலாம்’..! டிடிவி தினகரன் விமர்சனம்

’திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துவிட முடியும்’ என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வினை விதைத்தவன் வினை அறுக்க வேண்டும் என்பதுதான் நீதி. அதிலும் குறிப்பாக, ஜனநாயக நாட்டில் ‘தமிழ்நாட்டின் ராஜபக்சே’ (எடப்பாடி பழனிசாமி) மாதிரி செயல்படக் கூடியவர்கள் வீழ்ச்சியைத் தான் சந்திப்பார்கள். ஜாதி, மத பேதமில்லாத அதிமுகவில் ஜாதி, மத அரசியல் செய்து அனைவரையும் தன் வசப்படுத்தும் அளவிற்குப் போய்விட்டார் எடப்பாடி பழனிசாமி. பிரமாண்டமாக படம் எடுப்பதைப் போல, பெரும் பொருட் செலவில் செலவு செய்து பொதுக்குழுவை கூட்டி தன்னை பொதுச்செயலாளராக தானே அறிவித்துக் கொண்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Headlines Today : அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க இபிஎஸ் மறுப்பு -  தலைப்புச் செய்திகள் (ஜூன் 22, 2022) | EPS refuses to adjourn AIADMK general  body meeting Headlines Today ...

அதிமுக இன்று வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தத் தீயவர்களோடு பயணிக்கக் கூடாது என்பதற்காகவும், அம்மாவின் கொள்கைகளை, லட்சியங்களை தொடர்ந்து நிலைநாட்ட வேண்டும் எனவும் ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ எனும் கட்சியை உண்மையான தொண்டர்கள் உருவாக்கியுள்ளோம். ஜனநாயக முறைப்படி நாங்கள் வெற்றி பெற்று உண்மையான அம்மாவின் ஆட்சியை அமைப்போம். எடப்பாடி பழனிசாமி எப்படி பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசப்படுத்தினார் என்பதை வைத்திலிங்கம் சொல்லியிருக்கிறார்.

பதவி நாற்காலி மீது மட்டுமே கவனம்... முதல்வரை வசைபாடிய டிடிவி தினகரன்!

அந்த பொதுக்குழு உறுப்பினர்களை யார் வேண்டுமானாலும் வசப்படுத்தி விடலாம். ஏன், திமுக தலைவர் ஸ்டாலின் நினைத்தால் கூட அவர்களை வசப்படுத்தி, அதிமுகவின் பொதுச்செயலாளராக வந்துவிட முடியும். எனக்கு எடப்பாடி பழனிசாமி மேல் எதிர்ப்பு உணர்வு கூட கிடையாது. அவர்களுடைய செய்கையை கண்டிக்கிறோம், அவ்வளவு தான். எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு தமிழ்நாட்டின் ராஜபக்சே மாதிரி உருவாகியிருக்கிறார். ராஜபக்சே குடும்பம் எப்படி சிலோனை விட்டு ஓடினார்களோ, அதே நிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும். இன்றைக்கு யாரையெல்லாம் தன்வசப்படுத்தி எடப்பாடி பழனிசாமி இந்த நிலையை அடைந்தாரோ, அவர்களாலேயே அம்மாவுடைய இயக்கத்தை விட்டு அவர் விரட்டப்படும் காலம் விரைவில் வரும்”. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

அதுக்கெல்லாம் இப்போதைக்கு வாய்ப்பே இல்ல... கொரோனா பெருந்தொற்று குறித்து WHO வெளியிட்ட தகவல்...

Wed Jul 13 , 2022
கொரோனா பெருந்தொற்றின் முடிவு இன்னும் வெகு தொலைவில் உள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.. கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. […]

You May Like