fbpx

2 முதல் 30 வயது வரை உள்ள அனைவரும் இந்த மாத்திரை எடுக்க வேண்டும்…! இல்லை என்றால் ஆபத்து…

தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து 1 முதல் 19 வயது வரை உள்ள 3,81,186 குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு, 20 முதல் 30 வயது வரை உள்ள 83997 பெண்களுக்கு அல்பென்டசோல் என்ற சப்பி சாப்பிடும் மாத்திரை வழங்கப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆகிய அனைத்து இடங்களிலும் உள்ள மொத்த குழந்தைகள் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு சுகாதார துறை, குழந்தை வளர்ச்சி துறை, சமூக நலத் துறை மற்றும் பள்ளிக் கல்விதுறை பணியாளர்கள் மூலம் அளிக்கப்பட உள்ளது. விடுபட்ட குழந்தைகள் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 16.02.2024 அன்று அளிக்கப்பட உள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள 1 முதல் 2 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கு தலா 1/2 (200 mg) மாத்திரை மற்றும் 2 முதல் 30 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகள் மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு தலா 1 (400 mg) மாத்திரை அளிக்கப்படும். இதன் மூலம் ஒட்டு மொத்த குடற்புழுக்களை நீக்கி குழந்தைகள் ஆரோக்கியத்தை பேணிக்காக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தகுந்த ஒத்துழைப்பு நல்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி உள்ளார்.

Vignesh

Next Post

சகல பிரச்சனைகளையும் தீர்க்கும் முருகனின் சக்தி வாய்ந்த மந்திரங்கள்.! தினமும் பூஜையில் சொல்லி பாருங்கள்.!

Fri Feb 9 , 2024
சுப்பிரமணியன், கந்தன், கார்த்திகேயன், குகன், முருகன் என்ற பல பெயர்களை பெற்றவர் முருகப்பெருமான். பல பெயர்கள் இருந்தாலும் அதிகமான பக்தர்கள் இவரை முருகன் என்று தான் அழைத்து வருகின்றனர். போர் கடவுளாக கருதப்பட்டு வரும் முருகன் வீரம், வெற்றி, தன்னம்பிக்கை போன்ற சக்திகளின் கடவுளாகவும் இருந்து வருகிறார். அண்டைய காலத்திலிருந்து வழிபட்டு வரும் முருகனை ‘தமிழ் கடவுள் என்றும் அழைத்து வருகின்றோம். நம் தமிழ் கோயில்களில் முருகனின் திருநாமங்கள் பல […]

You May Like