fbpx

’இனி எல்லாமே இப்படித்தான் இருக்கும்’..!! நாளை தாக்கலாகிறது புதிய வருமான வரி மசோதா..!! என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது தெரியுமா..?

புதிய வருமான வரி மசோதா நாளை (பிப்ரவரி 13) மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது.

இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வந்த பழமையான வருமான வரி சட்டம் மாற்றப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருந்தால் வரி செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், புதிய வருமான வரி சட்ட மசோதா நாளை மக்களவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

நாளை தாக்கல் செய்யப்படும் மசோதா, நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்படும். இந்த மசோதா நாடாளுமன்றக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமன் முன்பே தெரிவித்திருந்தார். “குழு தனது பரிந்துரைகளை வழங்கி, அது மீண்டும் வந்து, அமைச்சரவை மூலம் திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமா..? என்பது குறித்து அரசாங்கம் முடிவெடுக்கும்” என்று அவர் கூறியிருந்தார்.

புதிய வருமான வரிச் சட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்..?

⇛ வருமான வரி தாக்கல் செய்வதை இன்னும் எளிமையாக்க புதிய இணையதளம் அல்லது செயலி உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.

⇛ வருமான வரி சட்டம் எளிமையாக்கப்பட்டு, அனைவரும் புரிந்துகொள்ளும் படி மாற்றப்பட உள்ளது.

⇛ பழைய வருமான வரி regime நீக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும், அதில் உண்மை இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

⇛ புதிய வருமான வரி regimeல் வீட்டு லோன் சலுகை போன்ற சலுகைகள் சேர்க்கப்படலாம்.

⇛ பழைய வருமான வரி regime, புதிய வருமான வரி regime இரண்டும் நடைமுறையில் இருக்கும். ஆனால், பழைய முறையில் உள்ள சலுகைகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

⇛ பிஸ்னஸ் வருமான வரி என்பது தற்போது சிக்கலாக இருக்கும் நிலையில், இதை அனைவரும் புரிந்துகொள்ளும்படி மாற்றப்படும்.

⇛ வருமான வரிச் சட்டம் சுமார் 6 லட்சம் வார்த்தைகளைக் கொண்டுள்ள நிலையில், புதிய சட்டம் மூலம் அது 3 லட்சம் வார்த்தைகள் கொண்டதாக குறைக்கப்பட உள்ளது.

Read More : ’தவெகவில் இருப்பதே குழந்தைகள் மட்டும்தானே’..!! சட்டத்தை மீறுகிறாரா விஜய்..? பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை..!!

English Summary

The new Income Tax Bill will be introduced in the Lok Sabha tomorrow (February 13).

Chella

Next Post

15-ம் தேதி முகாம்... 5,000 காலி பணியிடங்கள்...! வேலை இல்லாத இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு...!

Wed Feb 12 , 2025
Camp on the 15th... 5,000 vacant positions...! Super opportunity for unemployed youth

You May Like