fbpx

EVM – VVPAT 100 சதவீதம் சரிபார்க்க கோரிய வழக்கு ; தேர்தல் ஆணையத்திற்கு செக்.. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட மூவ் என்ன?

இவிஎம் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும், விவி பாட் இயந்திரம் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக சரிபார்க்க கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை தொடர்பாக பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) பதிவாகும் வாக்குகளையும், வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை (விவி பாட்) இயந்திரம் வழங்கும் ஒப்புகைச் சீட்டுகளையும் முழுமையாக சரிபார்க்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

கடந்த 18-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்புக்காக இந்த வழக்கை ஏப்ரல் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

அவையானவை, மைக்ரோ கண்ட்ரோலர் கன்ட்ரோல் யூனிட்டில் நிறுவப்பட்டுள்ளதா அல்லது விவி பாடில் நிறுவப்பட்டுள்ளதா?, நிறுவப்பட்ட மைக்ரோ கண்ட்ரோலர் ஒரு முறை புரோகிராம் செய்யக்கூடியதா?, எத்தனை சின்னங்கள் லோடிங் யூனிட்டுகள் உள்ளன?, இவிஎம் இயந்திரங்களைப் பாதுகாப்பதில், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவி பாட் ஆகிய இரண்டும் முத்திரைகளைக் கொண்டுள்ளனவா?,

ஸ்டோரேஜ் கால வரம்பு 45 நாட்களாக உள்ளதால் தேர்தல் மனுவை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 30 நாட்கள் ஆகும். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 81-ன் படி, தேர்தல் மனு வரம்பு காலம் 45 நாட்கள் ஆகும். இது குறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தேர்தல் ஆணையத்திடம் சரமாரி கேள்விகளை எழுப்பினர். பின்னர் இந்த வழக்கு இன்று மதியம் 2 மணிக்கு விசாரிக்கப்படும் என நீதிபதிகள் கூறினர்.

Next Post

அடுத்தக்கட்ட தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்! - காசாவை அடுத்து ரஃபா மீது குறி..

Wed Apr 24 , 2024
காசாவை அடுத்து ரஃபா மீதான மிகப்பெரும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹமாஸ் ஆயுதப்படையினரை வேட்டையாடி வரும் இஸ்ரேல் காசா பகுதியில் […]

You May Like