fbpx

Election 2024 | அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்த முக்கிய புள்ளிகள்.! வெளியான பரபரப்பு தகவல்.!

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சியை விட்டு வேறு கட்சியில் இணைவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், நாட்டு மக்களின் நலனுக்காக திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அந்தக் கட்சிக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுப்பதாக திமுக உறுதியளித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து மநீம கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் டாக்டர் அனுஷா ரவி என்பவர் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மநீம கட்சியிலிருந்து விலகிய அனுஷா ரவி பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அந்தக் கட்சியில் இணைந்து இருக்கிறார். மேலும் அதிமுகவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகுமார் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கம் ஆகியோரும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

Next Post

Salary Increase | 100 நாள் வேலை ஊதியம் ரூ.400 ஆக உயர்வு..!! இனி நகர்ப்புறங்களிலும் வேலை..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Sat Mar 16 , 2024
கிராமப்புற பெண்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது. 100 நாள் வேலை என பொதுமக்களால் பரவலாக அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ”அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு […]

You May Like