fbpx

பகீர் சம்பவம்: கொலை நடந்து 11 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட முன்னாள் அழகியின் சடலம்.! கால்வாயில் மிதந்த துயரம்.!

குருகிராம் ஹோட்டலில் கொலை செய்யப்பட்ட முன்னாள் மாடல் அழகியின் உடல் ஹரியானா மாநிலத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொலை தொடர்பாக பல்ராஜ் கில் என்ற நபரை கொல்கத்தாவில் கைது செய்துள்ளனர். மேலும் தப்பி ஓடிய மற்றொரு நபரான ரவி பாங்கா என்பவரை காவல் துறை தீவிரமாக தேடி வருகிறது.

முன்னாள் மாடல் அழகியான திவ்யா பகுஜா என்பவர் குருகிராம் நகரைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் அபிஜித் சிங் என்பவரால் கடந்த 5ஆம் தேதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை குருகிராம் நகரில் உள்ள ஓட்டல் அறையில் வைத்து நடைபெற்று இருக்கிறது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக இறந்த உடல் கிடைக்காததால் காவல்துறையினர் கடும் குழப்பத்தில் இருந்தனர்.

இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளில் கார் ஒன்று பதிவாகி இருந்தது. மேலும் அந்த கார் பாட்டியாலா நகருக்கு செல்லும் வழியில் உள்ள டோல் பிளாசா ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் குருகிராம் நகரில் கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகியின் உடலை காரில் வைத்து எடுத்துச் சென்று பாட்டியாலா நகரில் உள்ள கால்வாயில் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

பாட்டியாலா நகரில் வீசப்பட்ட உடல் நீரால் அடித்துச் செல்லப்பட்டு ஹரியானா மாநிலத்தின் தோஹானா கால்வாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி பல்ராஜ் கில் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ரவி பாங்கா என்ற நபரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.

Next Post

”டெல்டா மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை”..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்..!!

Sat Jan 13 , 2024
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”வடகிழக்கு பருவமழை தென் இந்திய பகுதிகளில் இருந்து ஜனவரி 15ஆம் தேதி வாக்கில் விலகுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு, இலங்கை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு […]

You May Like