fbpx

ராணுவ வீரர் படுகொலை சம்பவம்…! ஆளுநர் ரவியை சந்தித்த முன்னாள் ராணுவ வீரர்கள்…!

ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து வேதனையை தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் திமுக கவுன்சிலரால் ராணுவ வீரர் பிரபு என்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போராட்டத்தையும் நடத்தியது. அதன்படி நேற்று சென்னையில் ஓமந்தூரார் மருத்துவமனை முதல் போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.

ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் ஆளுநர் ரவியை சந்தித்து வேதனையைப் பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை தனது ட்விட்டர் பதிவில், ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்து பகிர்ந்து கொண்டனர்.

மேலும் மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

விவசாயிகளுக்கு இந்த தேதியில் ரூ.2000 பணம்.. ஆன்லைனில் பயனாளியின் நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம்?

Wed Feb 22 , 2023
பிரதமர் கிசான் யோஜனா என்பது விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்குவதற்கான மத்திய அரசின் திட்டமாகும். PM-Kisan திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அரசாங்கம் நேரடியாக […]

You May Like