fbpx

வால்பாறை முன்னாள் MLA கோவை தங்கம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோவை தங்கம், உடல் நலக்குறைவு காரணமாக, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். 

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை வால்பாறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கோவை தங்கம். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி கடந்த 2021ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். பின்னர், அதே ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தார் கோவை தங்கம். அதன் பின்னர் 2021இல் வால்பாறை சீட் அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு ஒதுக்கப்படாததால் தமாகவில் இருந்து விலகி சுயேட்ச்சையாக வால்பாறையில் களம் இறங்குவதாக அறிவித்தார். இதையடுத்து, அந்த முடிவை கைவிட்டு திமுகவில் இணைந்தார்.

வால்பாறை முன்னாள் MLA கோவை தங்கம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆறுமுகத்துக்காக பிரச்சாரம் செய்தார். எந்த வேட்பாளரிடம் தோற்றாரோ அதே வேட்பாளருக்காக அதே வேட்பாளரின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்தார் கோவை தங்கம். இது குறித்து விமர்சனம் எழுந்த போது, ஆறுமுகத்துக்காக நான் பிரச்சாரம் செய்ததற்கு காரணம் முக.ஸ்டாலின் தான். அவரின் மீது வைத்திருக்கும் விசுவாசம் தான். திமுக ஆட்சி காலத்தில் வால்பாறை தொகுதி மக்களுக்கு எம்எல்ஏ என்கிற முறையில் நான் கேட்டதை எல்லாம் செய்து கொடுத்தார். அதனால் தான் தொகுதி மக்களிடம் எனக்கு மிகப் பெரிய மரியாதை கிடைத்தது. 

வால்பாறை முன்னாள் MLA கோவை தங்கம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

நான் வால்பாறையில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன் என்று அறிவித்ததும் முக.ஸ்டாலினை தொலைபேசியில் என்னை அழைத்து நீங்கள் திமுகவில் சேர்ந்து விடுங்கள் என்றார். அதனால் நானும் முடிவை மாற்றிக் கொண்டேன். பத்தாயிரம் பேருடன் வந்து திமுகவில் இணைகிறேன் என்று சொன்னபோது, இது தேர்தல் நேரம் வேண்டாம் எப்படியும் நான் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்று முதல்வராகி விடுவேன். வெற்றி விழா முடிந்த கையோடு உங்களை எல்லாம் இணைப்பு விழா வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். மற்றபடி, என்னை தோற்கடித்தவருக்கு பிரச்சாரம் செய்தது காலத்தின் கட்டாயம் தான். முக.ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். அவர்தான் எனக்கு இனி தலைவர்’ என்று கூறியிருந்தார்.

வால்பாறை முன்னாள் MLA கோவை தங்கம் காலமானார்..!! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!!

இந்நிலையில், அவரது உடல் கோவை மாவட்டம் சாய்பாபா காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கோவை தங்கத்தின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

Chella

Next Post

’’பலாத்காரம் ’’ செய்துவிடுவோம்… மகளிர் ஆணையத் தலைவிக்கு வந்த மிரட்டல் ..!

Wed Oct 12 , 2022
பிக்பாஸ் போட்டியில் சஜீத்கான் என்ற நடிகர் தொடரக் கூடாது என புகார் அளித்ததைத் தொடர்ந்து பலாத்காரம் செய்துவிடுவோம் என இன்ஸ்டாகிராமில் மகளிர் ஆணையத் தலைவிக்கு மிரட்டல் வந்துள்ளது. பிக்பாஸ் 16 ஹிந்தி மொழியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்குகின்றார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கியது. இதில் சஜீத்கான் என்ற நடிகரும் போட்டியாளராக உள்ளார். பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய இவரை இப்போட்டியில் இருந்து நீக்க வேண்டும் என மகளிர் […]

You May Like