fbpx

ஏப்ரல் 13-க்குள் தேர்வு..!! கோடை விடுமுறை எப்போது..? பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனை..!!

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்.,15ஆம் தேதி துவங்கியது. ஏப்ரல் 2ஆம் தேதி முடிகிறது. 10ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கி, இந்த மாதம் 13ஆம் தேதி நிறைவு பெற்றது. ஐ.சி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 12ஆம் வகுப்புக்கு பிப்ரவரி 12ல் பொதுத்தேர்வு துவங்கியது ஏப்ரல் 2ல் முடிகிறது. 10ஆம் வகுப்புக்கு, பிப்ரவரி 21ல் தேர்வு துவங்கியது இந்த மாதம், 28ல் முடிகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி துவங்கியது. வரும் 22ஆம் தேதி தேர்வு முடிகிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ல் துவங்கியது. வரும் 25ஆம் தேதி முடிகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும், 26ம் தேதி துவங்க உள்ளது; ஏப்ரல் 8ல் முடிகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குப்பதிவு பணிக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஓட்டுச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, ஓட்டுச்சாவடியாக செயல்படும் அனைத்துப் பள்ளிகளையும், வரும் 15ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க உள்ளது. இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான, ஆண்டு இறுதி தேர்வுகளை, வரும் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசித்து, வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம், இன்று அல்லது நாளை பள்ளிக்கல்வியால் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read More : BIG BREAKING | திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..!! யார் யார் எந்த தொகுதியில் போட்டி..? முழு விவரம்..!!

Chella

Next Post

239-வது முறையாக வேட்புமனுவை தாக்கல் செய்தார் தேர்தல் மன்னன் பத்மராஜன்..!! ஆனால், ஒரு முறை கூட..!!

Wed Mar 20 , 2024
தருமபுரி மக்களவைத் தொகுதியில் முதல் நபராக தேர்தல் மன்னன் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன். ஹோமியோபதி மருத்துவரான இவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவது விருப்பமான செயல். இதுவரை இந்தியா முழுவதும் எம்எல்ஏ தேர்தல்கள், எம்.பி தேர்தல்கள், மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல்கள், குடியரசுத் தலைவருக்கான தேர்தல் என இதுவரை 238 முறை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இதுவரை […]

You May Like