fbpx

Exam | நெருங்கும் மக்களவை தேர்தல்..!! 1 முதல் 9ஆம் வகுப்பு வரை முன் கூட்டியே இறுதித்தேர்வு..!! பள்ளிக்கல்வித்துறை திட்டம்..!!

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை முன்னதாகவே முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வுகளை விரைந்து முடிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 2இல் முடிகிறது.

10ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15இல் தொடங்கி, இந்த மாதம், 13ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில், பிளஸ் 2-வுக்கு பிப்ரவரி 12இல் பொதுத்தேர்வு தொடங்கி, ஏப்ரல் 2-ல் முடிகிறது. 10-ம் வகுப்புக்கு, பிப்ரவரி 21-ல் தேர்வு துவங்கி இந்த மாதம், 28ல் முடிகிறது. இதேபோல் தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி வரும் 22ஆம் தேதியுடன் முடிகிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4இல் தொடங்கி வரும், 25ஆம் தேதியுடன் முடிகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 26ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8ஆம் தேதியுடன் முடிகிறது.

இந்நிலையில், மக்களவை தேர்தல் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக, 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்களிக்க பெரும்பாலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வாக்குச்சாவடிகளாக செயல்பட உள்ளன. அதற்காக, வாக்குச்சாவடியாக செயல்படும் அனைத்து பள்ளிகளையும், வரும் 15ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவுள்ளது.

இதன் காரணமாக, ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான ஆண்டு இறுதித்தேர்வுகளை, வரும் 13ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : BIG BREAKING | ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை..!! மக்களவை தேர்தலில் போட்டி..?

Chella

Next Post

BREAKING | ’உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வீர்களா’..? மார்ச் 21ஆம் தேதி 5 மணி வரை டைம்..!! கெடு விதித்த சுப்ரீம் கோர்ட்..!!

Mon Mar 18 , 2024
தேர்தல் பத்திர வழக்கில் எஸ்பிஐ-யின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. அனைத்து தரவுகளும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக உள்ளது. ஆனால், எஸ்பிஐ ஏன் எண்களை வெளியிடவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவை நாங்கள் புரிந்து கொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் வெளியிடப்பட்டதாக எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது. உத்தரவிட்டால்தான் தாக்கல் செய்வோம் என்ற போக்கை எஸ்பிஐ கடைப்பிடிக்கிறது. உச்சநீதிமன்ற […]

You May Like