fbpx

’தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்’..! அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

ரயில்வே குரூப் டி தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம் ஒதுக்கியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி போட்டி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளை எழுத தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ”இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்காக வரும் 8ஆம் தேதி நடைபெறும் போட்டி தேர்வுகளை எழுதுவதற்காக தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழக மாணவர்கள் ஆந்திர தேர்வு மையத்திற்கு செல்ல 700 கி.மீட்டருக்கு கூடுதல் தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது.

’தமிழக மாணவர்களுக்கு ஆந்திராவில் தேர்வு மையம்’..! அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

அதோடு தேர்வு நடைபெறும் இடத்திற்கு 36 மணி நேரம் முன்னதாக சென்று அறை எடுத்து தங்க வேண்டிய சூழல் உள்ளதால், இது சாத்தியமல்ல. 700 கி.மீட்டருக்கும் கூடுதலான தொலைவில் தேர்வு மையம் ஒதுக்குவது என்பது கடுமையான மன உளைச்சலையும், தேர்வுக்கு தயாராவதில் தடையை ஏற்படுத்தும். மேலும் மாணவர்களின் தேர்வு எழுதும் திறனை கெடுக்கும் எனவே இது கூடாது. மாணவர்கள் இயல்பாக தேர்வு எழுதுவதை உறுதி செய்ய வேண்டியது ரயில்வே தேர்வு வாரியத்தின் கடமை. எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஒரு தலை காதல்.. காதலியின் கணவரை; துடிக்க துடிக்க கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்... வாலிபர் கைது..!

Mon Sep 5 , 2022
பெங்களூரு காஜன நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கு பூக்கள் அலங்காரம் செய்து கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சதீஷை கடந்த இரண்டாம் தேதி பழைய பையப்பனஹள்ளி பகுதியில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து பையப்பனஹள்ளி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சதீஷை கொலை செய்ததாக அவரது நண்பர் […]
தொழில் அதிபர் கழுத்தறுத்து கொலை..! 120 பவுன் தங்க நகைகள் பறிமுதல்..! வெளியான திடுக்கிடும் தகவல்..!

You May Like