நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நாளை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-1 தேர்வுகள் நடைபெற உள்ளது. எனவே இதன் காரணமாக பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வேறொரு நாளைக்கு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் குளறுபடி ஏற்பட்டதால் இன்று நடக்கவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. சென்னை பல்கலைக்குட்பட்ட அரசு, கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து தனியார் கலை அறிவியல் கல்லூரிகளில் மெஸ்டர் தேர்வுகள் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுகள் கடந்த அக்டோபர் 30ம் தேதி நடைபெற இருந்தது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஜூலை 21-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்ய ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அக்டோபர் 30-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. எனவே தற்போது எந்த மாற்றமும் இன்றி நாளை குரூப் 1 தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளது.